தரக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் இலங்கையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்ற தெங்கு உற்பத்திகளின் தரம் உயர்வாக இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் அக்கைத்தொழில்களுக்கு இப்பிரிவு உதவுகிறது. இப்பொறுப்புகளை நிறைவேற்றுமுகமாக முன்னணி தெங்கு உற்பத்திகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டுள்ள இவ்வதிகாரசபை, மத்திய தரக்கட்டுப்பாட்டு பரிசோதைனைக் கூடமொன்றை நடாத்துகின்றது. பரிசோதிப்பதற்கு முன்னர் மாதிரிகள் தயாரிக்கப்படுகின்ற அதேநேரத்தில் வாரம் முழுவதிலும் மாதிரிகள் பரிசோதிக்கப்படும்.

பரிசோதனைக்கான கட்டணம்

2009 சனவரி 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) பதிவு இலக்கம் 409046592-7000 பிரகாரம் வற் சேர்ப்பதற்கும் 2009.06.01 ஆம் திகதி முதல் NBT அறவிடுவதற்கும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகாரமளித்துள்ளது.

பரிசோதனை வசதிகள்

  • இலங்கை தரக்கட்டளை நிறுவனம் வழங்கியுள்ள விவரக்கூற்று மற்றும் பரிசோதனை முறைகளின் பிரகாரம் விஞ்ஞான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஏற்றுமதிக்கான தெங்கு உற்பத்தியை சான்றுப்படுத்தி பாதுகாத்து அவற்றைக் கப்பலில் ஏற்றுவதற்காக நுண்ணுயிர் பரிசோதனை மற்றும் உயிரியல் இரசாயன பரிசோதனைகளை நடத்துதல்.
    • தேங்காய் சதை உற்பத்தி
    • தேங்காய் சதை அல்லாத உற்பத்தி
  • ஏற்றுமதிக்காக தெங்கு உற்பத்திகளைத் தயாரிக்கின்றபோது அவற்றின் தரம் உயர்ந்த நிலையிலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
    • தயாரிப்பை மேம்படுத்தவதற்காக நுண்ணுயிர் பரிசோதனை மற்றும் உயிரியல் இரசாயன பரிசோதனை செய்தல்
      • உலர் தேங்காய்
      • நீர் பகுப்பாய்வு
    • உலர் தேங்காய் கைத்தொழிலுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்குதல், தொழிற்சாலைகளைப் பரிசோதிக்கச் செல்தல், புலனாய்வு மற்றும் வளப் பங்களிப்பு
  • தேங்காய் எண்ணெய் கைத்தொழிலுக்காக தரக்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
  • தெங்கு சார்ந்த உற்பத்திகள் தொடர்பான பரிசோதனைக்கூட தொழில்நுட்பவியலாளர்களுக்காக பரிசோதனைக்கூடங்களில் செய்யப்படுகின்ற பரிசோதனைகள் தொடர்பாக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்
  • வேறு எண்ணெய்கள் கலக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயை அடையாளம் காண்பதற்காக பரிசோதனைக்கூட பரிசோதனை வசதிகளை வழங்குதல்
  • தெங்கு சார்ந்த கைத்தொழில்களுடன் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான உதவிகளை வழங்குதல்
  • தெங்கு உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்கின்றவர்களுக்கும் 15% விலைக் கழிவுடனான பரிசோதனை வசதிகளை வழங்குதல்.
  • பரிசோதனை ஆய்வுகூடம் என்றவகையில் நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்கும்

தெங்கு சார்ந்த உற்பத்திகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் 15% விலைக் கழிவு வழங்கப்படும்.
சான்றிதழ் கட்டணம் - ரூ. 200/=
* அனைத்து கட்டணங்களும் சம்பந்தப்பட்ட வரிக் கட்டணத்துடன் இணைக்கப்பட வேண்டும்.