• தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் ஏனைய பிரிவுகளுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் பணிகள் இப்பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்தின் மற்றும் நிதி செயலாற்றுகை திட்டத்தின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் கருத்திட்டங்களுக்கும் நிதி வசதிகளை வழங்குதல் நிதிப் பிரிவின் பொறுப்பாகும். தெங்கு செஸ் நிதியம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் முகாமைத்துவப்படுத்துதல் இதில் அடங்குகிறது.
  • நிவாரண திட்டங்கள், செஸ் நிதிய நிர்வாகம், ஆலை உரிமையாளர்களின் அபிவிருத்தி நிதியம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி கருத்திட்டங்களின் அனைத்து கொடுப்பனவுகளையும் தெ.அ.அதிகாரசபையின் நிதிப்பிரிவு மேற்கொள்கிறது.
  • சபையின் பொதுவான தொழிற்பாட்டு பணிகள், செஸ் நிதியம், ஆலை அபிவிருத்தி நிதியம், தேங்காய் எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்கும் திட்டம், ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றிற்கான வரவு செலவு திட்ட ஏற்பாடுகளை செய்தல் என்பவை இப்பிரிவின் இன்னமொரு அடிப்படை பொறுப்பாகும்.
  • அரசாங்கத்தின் கணக்காய்வுக்காக வருடாந்த, காலாண்டு மற்றும் மாதாந்த கணக்குகளைத் தயாரிக்கும் பொறுப்பையும் இப்பிரிவு வகிக்கிறது. திறைசேரியும் பணிப்பாளர் சபையும் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கவேண்டிய கணக்குகள் தொடர்பாகவும் பொறுப்புக் கூறவேண்டியதாக இருக்கிறது.
  • செஸ் நிதியத்தின் அனைத்து ஆவணப் பணிகள், கணக்காய்வாளர் நாயகம், திறைசேரி மற்றும் வங்கிகளுடன் மேற்கொள்ளும் அனைத்து கடிதப் பரிமாறல்கள் உட்பட நிறுவனத்தின் பணிகளை முகமைப்படுத்தும் பொறுப்பையும் தெ.அ.அதிகாரசபையின் நிதிப்பணிப்பாளர் வகிக்கிறார்.
  • தொழில்சார் நிபுணர்கள், எழுதுவினைஞர்கள் மற்றும் ஏனைய பணியாட்டொகுதியினரின் ஒத்துழைப்புடன் நிதிப்பணிப்பாளர், பிரதி நிதிப்பணிப்பாளர், பதிற்கடமையாற்றும் கணக்காளர் ஆகியோர் நிதிப்பிரிவின் முகாமைத்துவ பணிகளை மேற்கொள்கின்றனர்.