• 0
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

தெ.அ.அ. சபைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

இலங்கையில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (தெ.அ.அ) என்பது 1971ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நியதிச்சட்ட முதன்மை அமைப்பாகும். இலங்கையில் தெங்கு கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை வகிக்கின்ற அது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்றது.

இந்த இணையத்தளம் தெங்கை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றவர்களுக்கு வெளிநாட்டு கொள்வனவாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் வசதிகளைச் செய்து கொடுக்கிறது.

மேலும் இந்த இணையத்தளம் அதிகாரசபையின் பணிகளையும் அது வழங்குகின்ற சேவைகளையும் இலாபகரமான வர்த்தக நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் ஏனைய சம்பந்தப்பட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் தகவல் தோற்றுவாயாகவும் சேவையாற்றுகிறது.